தமிழகத்தையே அதிரவைத்த ஓரினசேர்க்கை கொலை வழக்கு குற்றவாளி குத்தி கொலை.. நடந்தது என்ன?.. 3 பேர் கைது.!  பரபரப்பு தகவல்.!

தமிழகத்தையே அதிரவைத்த ஓரினசேர்க்கை கொலை வழக்கு குற்றவாளி குத்தி கொலை.. நடந்தது என்ன?.. 3 பேர் கைது.!  பரபரப்பு தகவல்.!


viluppuram-kottakuppam-rowdy-homosex-killed-by-3-man-ga

ஓரினசேர்கையில் ஈடுபடுத்தி 2 பேரை கொலை செய்து ஹோமோசெக்ஸ் ரௌடியான அபினேஷ் இரத்தவெள்ளத்தில் துள்ளத்துடிக்க கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் வருடம் 13 வயது சிறுவன் கட்டாய ஓரினசேர்கைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டான். இந்த விவகாரத்தில் மரக்காணம் நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கலைமணியின் மகன் அபினேஷ் (வயது 22) என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மற்றொரு 12 வயது சிறுவனையும் அபினேஷ் கொலை செய்தது உறுதியானது. 

அவன் இரண்டு சிறார்களையும் கட்டாய தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்துள்ளான். மேலும், அபினீஷின் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அபினேஷ், புதுச்சேரி சோலை நகரில் பகுதியில் வசித்து வந்துள்ளான். இந்த நிலையில், அபினேஷ் மர்ம நபர்களால் கடற்கரை பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். 

Viluppuram

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அபினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், அபினேஷ் தற்போது வசித்து வந்த பகுதியில் 7 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அவனுக்கு அபினேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனைகவனித்த சிறுவனின் சித்தப்பா கலையரசன், அபினேஷை தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி கலையரசன் சோலை நகர் கடற்கரையில் உயிரிழந்துகிடக்க, அபினேஷ் அவரை கொலை செய்திருப்பான் என ஊர்மக்கள் சந்தகித்து அரசல் புரசலாக பேசியுள்ளனர். இந்த நிலையில், கலையரசனின் உறவினர் சதீஷ், நண்பர்கள் அப்பு, அஜீத் அகமது ஆகியோருடன் சேர்ந்து அபினேஷை குத்தி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, குற்றவாளிகளில் 3 பேரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.