மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
15 வயது சிறுமி தாய்மாமன் மகன் உட்பட 9 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.!
10 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமி, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமி சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனைக்கண்ட ஆசிரியை ஹேமலதா சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக கண்ணீர் மல்க விவரித்துள்ளார்.
சிறுமி கூறிய தகவலை கேட்டு அதிர்ந்துபோன ஆசிரியை, முதன்மை மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரின் அறிவுரைப்படி விழுப்புரம் மகளிர் காவல் துறையினருக்கும், சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, சிறுமியின் தாய்மாமன் ராஜேந்திரன் மகன் சசிகுமார் (வயது 28) மற்றும் அவனின் நண்பர்கள் 9 பேர் சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி தகவல் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாய்மாமன் மகன் சசிகுமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ளோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.