விளையாடி கொண்டிந்த 11வயது சிறுமி! தேடிச் சென்ற தாய் கண்ட அதிர்ச்சி! உதட்டில் காயம்.. சிதறிக் கிடந்த வளையல்கள்... வீட்டின் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுவதால், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் மகள் வர்ஷினி, கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஒரு கூரை வீட்டில் சத்யா ஓய்வெடுத்து கொண்டிருந்த நிலையில், மற்றொரு வீட்டில் சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை! பள்ளி பேருந்தால் நொடிப்பொழுத்தில் நடந்த துயரம்!
தேடிச் சென்ற தாய்க்கு அதிர்ச்சி
சிறிது நேரம் கழித்து மகளை காணாமல் போனதை கவனித்த சத்யா, அருகில் தேடிச் சென்றுள்ளார். அப்போது மற்றொரு வீட்டில் வர்ஷினி உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறியுள்ளார்.
தகவலின்படி, சிறுமியின் உதட்டில் காயங்கள் இருந்ததுடன், அவர் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
பல கோணங்களில் போலீஸ் விசாரணை
தகவல் அறிந்ததும் கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் கண்டாச்சிபுரம் காவல்துறை சார்பில் உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த மர்ம மரணம் காரணமாக கிராம மக்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.
இதையும் படிங்க: அக்கா கதவை திற ரொம்ப பயமா இருக்கு! கதவை உடைத்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி.. கன்னியாகுமரியில் நடந்த பயங்கரம்!