எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
"கள்ளக்காதலிக்காக நண்பனின் ஆணுறுப்பை அறுத்த நபர்... " முறை தவறிய உறவால் வாலிபர் உயிர் ஊசல்.!!
விழுப்புரம், மரகதபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இருவேல் பட்டை பகுதியை சேர்ந்த அன்பு என்கிற சரத்குமார்( 39) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக பயணித்து வந்தனர். இந்நிலையில் சங்கர் தனது மனைவி அஞ்சு லட்சத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது சொந்த ஊரான மரகதபுரத்தை சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு கள்ள உறவு இருந்துள்ளது.
கள்ளக்காதலியை தனது நண்பரான அன்புக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் சங்கர். இந்நிலையில் அன்புவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால் சங்கரை அந்தப் பெண் கண்டு கொள்ளவில்லை. இதில் ஆத்திரமடைந்த சங்கர் கள்ளக்காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனை கள்ளக்காதலி அன்புவிடம் கூறியதும் நேற்று முன்தினம் மதுபோதையில் சங்கரிடம் அன்பு தகராறு செய்துள்ளார்.

மது போதையில் சங்கரை பல இடங்களில் தாக்கியுள்ளார் பிறப்புறுப்பின் ஒரு பகுதியை எடுத்துள்ளார். மேலும் வலது கண்ணை தோண்டியுள்ளார். பின்னர் உடலை மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் தூக்கி எரிந்து சென்றுள்ளார். உயிருக்கு போராடி வந்த சங்கரை அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
விசாரணையில் தனது சொந்த நண்பரால் இவ்வாறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சங்கர் மனைவி அஞ்சுலட்சம் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அன்புவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலைகளுக்கு தூண்டுதலாக இருந்த கள்ளக்காதலியையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பல காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் சங்கருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!