
Villagers went to thirupati temple for rain
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள், மழைக்காக வேண்டி ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாராம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டி, விரதமிருந்து, ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செட்டிமாராம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு பதினைந்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருப்பதிக்கு கிளம்பியுள்ளனர்.
கிராமத்தில் உள்ள அனைவரும் திருப்பதிக்கு செல்வதால், தங்கள் கிராமத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என கரமாக மக்கள் காவேரிபட்டணம் காவல் நிலையத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். போலீசார் மனுவை ஏற்றுக்கொண்ட நிலையில், செட்டிமாராம்பட்டி கிராமத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை வேண்டி, ஒரு கிராமமே ஊரை காலி செய்து திருப்பதிக்கு சென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement