கொரோனாவுக்காக வாரி வழங்கிய தேமுதிக தலைவர்!ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த கேப்டன்!

கொரோனாவுக்காக வாரி வழங்கிய தேமுதிக தலைவர்!ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த கேப்டன்!


Vijayakanth relif fund for corona

 சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகள் உட்பட 190 நாடுகளில் தீவிரமாக பரவி கோரதாண்டவமாடி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்புகளின்  எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் பல நாடுகளும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகளிலும் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வீட்டிலேயே அனைவரும் தனித்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 698 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு,   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1445 பேர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியை பல பிரபலங்கள்  மத்திய, மாநில அரசுக்கு அளித்து வருகின்றனர். ஏற்கனவே, டாட்டா நிறுவனம், விப்ரோ, கோடெக் மகேந்திரா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, நடிகர் அக்‌ஷய்குமார் ஆகியோர் நிதி உதவி செய்துள்ளனர்.


இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்த், கட்சி தலைமை அலுவலகத்தையும், ஆண்டாள் அழகர் கல்லூரியையும் கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் , கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரி மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த பதிவில் கூறி உள்ளார்.