234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! சூடு பிடிக்கும் அரசியல் களம்.!

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! சூடு பிடிக்கும் அரசியல் களம்.!


vijayakanth announcement for election

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும். 234 தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளின், தேமுதிக பொறுப்பாளர்கள், முதல் கட்டமாக, இன்று நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "234 சட்டமன்ற தொகுதிகளின், தேமுதிக பொறுப்பாளர்கள், முதல் கட்டமாக, இன்று நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி,கிளைக் கழக,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்