21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏன்? தெளிவாக விளக்கம் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்! அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ!

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏன்? தெளிவாக விளக்கம் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்! அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ!



Vijayabaskar talk about corona

அரசு விதித்த ஊரடங்கை மதித்து தயவுசெய்து ஒத்துழைப்பு தாருங்கள், தமிழ்நாடு அரசு முழுவீச்சுடன் இயங்கி வருகிறது என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக சுகாதாரத் அமைச்சர் விஜயபாஸ்கர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் பரவி உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், ஒவ்வொரு தனிநபரும் தயவுசெய்து மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த சூழலை நம்மால் எதிர்கொள்ள முடியும். உலகின் வளர்ந்த நாடுகள் பல இந்த சூழலை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். ஆனால் நம் நாட்டின் பிரதமர், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனை நம் மனதில் கவனமாக வைத்துக் கொண்டு நம் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டிற்குள்ளே இருப்போம் என தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும், கட்டாயமாக்கப்படும், மீறினால் தண்டனையும் வழங்கப்படும் என கூறி இருந்தாலும் இதையும் தாண்டி உங்களை மிக பணிவுடனும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் இந்த 21 நாட்கள் வீட்டிற்குள் இருப்பது நம் தேசத்தை காப்பதற்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.