சிசிடிவி கேமராக்களை உடைத்து விஜய் ரசிகர்கள் ரகளை! கடைகளுக்கு தீ வைப்பு!vijay fans ragalai

கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் பிகில் திரைப்படம் சிக்கியது. பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் ரத்து என கூறப்பட்டு வந்தநிலையில், பிகில் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்ததால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, ரவுண்டானா அருகே உள்ள தியேட்டரில் பிகில் சிறப்புக்காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 

Bikil

மேலும் ரவுண்டான பகுதியில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமராக்களையும் உடைத்தனர். கற்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். சில பேனர்களை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.