"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தூய்மை பணியாளர்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்த காரியம்! குவியும் பாராட்டுகள்!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், 4421 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.114 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் அறிவுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் கொரோனோவை கட்டுப்படுத்த தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இரவு பகல் பாராமல் மக்களின் நலனுக்காக போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்காக விஜய் ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களின் குடும்பத்தாருக்கு அரிசி, பருப்பு, மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் ஆகியவற்றை கொடுத்து உதவியுள்ளனர்.மேலும் அவர்களுக்கு இலவச முககவசம், கையுறைகள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளனர்
அதுமட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல பகுதிகளில் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கும் 20 இயந்திரங்களையும் வழங்கி உதவி செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.