தமிழகமே அதிர்ச்சி..! கள்ளகாதலுக்காக சாதி மறுப்பு திருமணம் செய்த மனைவியை கொன்று புதைத்த கணவன்.. நடுநடுங்கவைக்கும் பயங்கரம்.!

தமிழகமே அதிர்ச்சி..! கள்ளகாதலுக்காக சாதி மறுப்பு திருமணம் செய்த மனைவியை கொன்று புதைத்த கணவன்.. நடுநடுங்கவைக்கும் பயங்கரம்.!


vellore-kv-kuppam-love-married-woman-killed-by-husband

ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை, கணவன் கள்ளக்காதல் வயப்பட்டு உயிருடன் புதைத்து கொலை செய்த துயரம் நடந்துள்ளது. காதலித்து கரம்பிடித்து 3 வருடத்தில் கள்ளக்காதல் வயப்பட்ட கணவனால், பெற்றோரை எதிர்த்து ஆசை ஆசையாய் காதலனை கணவனாக்கிய பெண் நிராசையுடன் நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்ட பதைபதைப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம், வடகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கணேசன் என்ற விநாயகம் (வயது 24). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். குடியாத்தத்தில் உள்ள தாரணம்பேட்டையில் வசித்து வருபவர் பாலாஜி. இவரின் மகள் சுப்ரஜா (வயது 24). வேலூர் ஐ.டி.ஐ-யில் விநாயகமும் - சுப்ரஜாவும் படித்து வரும்போது காதல் வயப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்களின் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து, கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி, காதல் திருமணம் செய்துகொண்டு மூடினாம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.  

இவர்களுக்கு தற்போது 2 வயதுடைய ஆண் குழந்தை மகனாக இருக்கிறார். தனது எதிர்ப்பையும் மீறி சுப்ரஜா செயல்பட்டதால், அவருடன் பெற்றோர்கள் இன்று வரை பேசாமல் இருக்கின்றனர். மேலும், வீட்டிலும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், சுப்ரஜாவின் உறவினர் ஒருவர் சுப்ரஜா எப்படி இருக்கிறார் என்பது குறித்து விசாரித்து வரலாம் என்று சென்றபோது, கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக சுப்ரஜா மாயமாகிவிட்டதாக விநாயகம் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாக எண்ணிய சுப்ரஜாவின் உறவினர், கே.வி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

vellore

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விநாயகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, விநாயகம் மற்றும் அவனது தம்பி விஜய், உறவினரான 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் சுப்ரஜாவை தாக்கி, உயிருடன் மண்ணில் புதைத்து கொலை செய்த பகீர் தகவல் அம்பலமானது. அங்குள்ள சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கவே, நேற்று அதிகாரிகள் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விநாயகம், விஜய் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 17 வயது சிறுவன் சென்னை சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். கொலைக்கான காரணம் தொடர்பாக விநாயகம் அளித்த வாக்குமூலத்தில், "நானும் - சுப்ரஜாவும் காதலித்து திருமணம் செய்தோம். எங்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடத்தில் எனக்கு வேலூரை சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இந்த தகவலை அறிந்த சுப்ரஜா காதல் கணவனாகிய என்னைக் கண்டித்து, கள்ளக்காதலை கைவிடக்கூறி அறிவுறுத்தினார். இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த நான் அவ்வப்போது அவரை அடித்து சித்ரவதை செய்தும் வந்தேன். அவரின் பெற்றோர் பேசாமல் இருப்பதால், அவர் யாரிடமும் இதனை தெரிவிக்க வழிவகை இல்லை. எனது சித்ரவதை அணுகுமுறையால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

vellore

எது எப்படியானாலும் கள்ளக்காதலை கைவிடக்கூறி தொடர்ந்து தகராறு செய்தார். நான் ஒருகட்டத்தில் கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த நிலையில், அதற்கு இடையூறாக இருந்த சுப்ரஜாவை கொலை செய்ய திட்டமிட்டேன். எனது திட்டப்படி, கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக தம்பி விஜய், உறவினரான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து சவக்குழி தோண்டி, மறுநாள் மனைவியிடம் வேண்டுமென்றே தகராறு செய்து அடித்து காயப்படுத்தினேன். 

பின்னர், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக நடித்து, அவரை நம்பவைத்து சர்க்கார் தோப்புக்கு அழைத்து சென்று நாங்கள் 3 பேரும் கூட்டாக சுப்ரஜாவை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, ஏற்கனவே தோண்டப்பட்டு தயாராக இருந்த குழிக்குள் அவரை உயிருடன் புதைத்து வந்துவிட்டோம். எதுவும் தெரியாததுபோல் நாங்கள் இருந்த நிலையில், சுப்ரஜாவின் மீது நன்மதிப்பு கொண்ட அவரது உறவினர், சுப்ரஜா எப்படி இருக்கிறார்? நான் நன்றாக கவனித்துக்கொள்கிறேனா? என்று விசாரிக்க வந்தபோது நான் கூறிய மழுப்பல் பதிலால் சிக்கிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளான்.