தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பெற்றோர்களே உஷார்... சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் இருந்த செல்போன் சார்ஜர்... பெற்றோரின் கவனக்குறைவால் பரிபோன 8 மாத குழந்தை...
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர் - சஞ்சனா தம்பதியினர். இவர்களுக்கு 8 மாதத்தில் சானித்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு செல்போன் சார்ஜரை பிளக்கில் செருகி விட்டு சார்ஜ் போட்டுள்ளனர்.
அதனையடுத்து இன்று காலை செல்போனை சார்ஜிலிருந்து எடுத்து விட்டு பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனை அறியாத 8 மாத குழந்தை பிளக்கில் இருந்தா சார்ஜர் இணைப்புடன் விளையாடி கொண்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சார்ஜர் ஒயரை வாயில் திணித்து விளையாடியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.