இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷனா? பேராசையே இல்லாத ஆட்டோ ஓட்டுனர் செய்த செயலை பாருங்க! குவியும் பாராட்டுக்கள்...

மிசோரம் மாநிலத்தின் லாங்ட்லாய் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் லால்மிங்முனா தனது நேர்மையால் பலரின் மனதை வென்றுள்ளார்.
ரூபாய் 17 லட்சத்தை கொண்ட வியாபாரி
மியான்மரை சேர்ந்த ஒரு வியாபாரி கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் லால்மிங்முனா ஓட்டும் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அவர் ஒரு பாலித்தீன் பையில் ரூபாய் 17 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.
தவறுதலாக பணப்பையை மறந்து விட்டார்
வியாபாரி இறங்க வேண்டிய ஹோட்டலுக்கு வந்ததும், பணப்பையை ஆட்டோவில் விட்டுவிட்டார் என்பதை உணராமல் ஹோட்டலுக்குள் சென்று விட்டார். லால்மிங்முனா, வழக்கம்போல் தனது ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது, பையில் இருந்த பணத்தை கவனித்தார்.
இதையும் படிங்க: அடடே..நடனமாடும் ஆடுகள்! எங்கு உள்ளது தெரியுமா? மனதை மகிழ்விக்கும் வீடியோ....
நேர்மையை நிரூபித்த லால்மிங்முனா
சில தூரம் சென்ற பிறகு, அவர் பணம் வியாபாரியின் பை என்பது புரிந்து, உடனே திரும்பி அந்த ஹோட்டலுக்கு சென்று பணத்தை ஒப்படைத்தார். வியாபாரி அதிர்ச்சியுடன் அவரது நேர்மையை பாராட்டி, வெகுமதி தர முன்வந்தார்.
வெகுமதியை நிராகரித்த நேர்மையாளர்
ஆனால் லால்மிங்முனா வெகுமதியை நிராகரித்து அங்கிருந்து செல்ல தனது நல்லுணர்வை காட்டினார். இந்தச் செயல் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமுதாய பாராட்டுகள்
இந்த நேர்மையான செயலை பாராட்டி, ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர் சங்கத் தலைவர் சி.ஜாதிங்கா, லால்மிங்முனாவின் நேர்மையை வெளிப்படையாக புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் இவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
இதையும் படிங்க: ஒரே படுக்கை! ஒரே பாம்பு! 7 நாள்கள் இடைவெளியில் இரு உயிர்கள்! சோகத்தில் தத்தளிக்கும் தாய்-தந்தை!