தேவாலயத்தில் பிராத்தனையால் ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்! திடீரென தற்கொலைப்படை தாக்குதல்! அதிர்ச்சி சம்பவம்...



suicide-blast-syria-church-attack

மேற்கு ஆசியாவின் முக்கிய நாடாக இருக்கும் சிரியா, தற்கொலைப்படை தாக்குதலால் தற்போது பெரும் சோகத்திற்குள்ளாகியுள்ளது. டமாஸ்கஸ் நகரத்தில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

மக்கள் கூடிய இடத்தில் பயங்கர தாக்குதல்

பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்களுடன் கலந்து இருந்த ஒருவன் திடீரென தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவம், தேவாலயத்திற்கும் அதில் உள்ளவர்களுக்கும் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

சிரியா சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இத்தாக்குதலில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 52 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷனா? பேராசையே இல்லாத ஆட்டோ ஓட்டுனர் செய்த செயலை பாருங்க! குவியும் பாராட்டுக்கள்...

பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது இதுவரை தெரியவில்லையெனினும், சம்பவத்திற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சமாதானத்தை சிதைத்த தாக்குதல்

மக்கள் அமைதியாக பிரார்த்தனை செய்த இடத்தில் தாக்குதல் நடத்தியிருப்பது, அவர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மார் எலியாஸ் தேவாலயத்தில் நடந்த இந்த திடீர் தாக்குதல், சிரியா மக்களின் சமாதான வாழ்விற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: அடடே..நடனமாடும் ஆடுகள்! எங்கு உள்ளது தெரியுமா? மனதை மகிழ்விக்கும் வீடியோ....