அரசியல் தமிழகம்

தமிழகத்தில் செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தல்!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Summary:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்படாமல் இருக்கும் பகுதிகளில் வரும் செப்.,15க்குள் தேர்தலை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்படாமல் இருக்கும் பகுதிகளில் வரும் செப்.,15க்குள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருப்பத்தூர்.,வேலூர். ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. இதில் சில மாவட்டங்கள் புதிதாக பிறைக்கப்பட்டவை என்பதால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையியல் இந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் செப்.,15க்குள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க  உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்தாதது ஏற்புடையது அல்ல எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தலை நடத்த அரசு தரப்பில் கோரப்பட்ட 6 மாதம் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு கோர்ட் மறுத்துவிட்டது.


Advertisement