மதுபோதையில் ரயிலில் அயர்ந்து தூங்கிய பெண்.. நள்ளிரவு ஒருமணியளவில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..



Two railway employees assaulting drunken women in train

மதுபோதையில் ரயிலில் தூக்கியபடி சென்ற பெண்ணை தற்காலிக ரயில்வே ஊழியர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் 40 வயதுடைய பெண் ஒருவர் நேற்று இரவு பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் பரனுர் செல்ல ஏறி உள்ளார். அந்த பெண்ணிற்கு குடிப்பழம் இருந்துள்ளது. மேலும் அவர் ரயிலில் ஏறியபோது மது அருந்தி இருந்ததால் ரயிலில் ஏறியதும் அயர்ந்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஏறிய மின்சார ரயில் செங்கல்பட்டு வரை சென்று மீண்டும் கடற்கரைக்கு வந்து அதன் பின்னர் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு பணிக்க சென்றுள்ளது. அதுவரை அந்த பெண் ரயிலில் இருந்து இறங்காமல் மது போதையில் ரயிலிலையே படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் ரயில் பராமரிப்பு பணிக்க நாளிரவு ஒருமணியளவில் தற்காலிக ஊழியர்களாக  வேலைபார்த்துவரும் சுரேஷ்(30), அப்துல் அஜிஸ் (30) ஆகிய இருவரும் ரயிலில் ஏறியுள்ளனர். அப்போது பெண் ஒருவர் ரயில் பெட்டியில் தூங்குவதை பார்த்த அவர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்துள்ளனர்.

மேலும் இதனை வெளியே யாரிடமும் சொல்ல கூடாது எனவும் மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் மனவேந்தனை அடைந்த அந்த பெண், இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்து ரயில்வே போலீசார் சுரேஷ், அப்துல் அஜிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.