தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள்..! நள்ளிரவில் நடந்த நடு நடுங்க வைக்கும் சம்பவம்..! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள்..! நள்ளிரவில் நடந்த நடு நடுங்க வைக்கும் சம்பவம்..!

நீலகிரி அருகே தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த 11ஆம் தேதி, நீலகிரி மாவட்டம் மெட்டுக்கல் ஆதிவாசி என்னும் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் திம்மன் என்னும் 2 இளைஞர்கள் இரவு நேரத்தில் தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்துவந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பாபு மற்றும் அவருடைய கூட்டாளிகளான குமார், மூர்த்தி, மகேந்திரன், கிருஷ்ணன், ஜெ.குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாபு என்பவரின் மகளும், திம்மன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விஷயத்தை அறிந்த பாபு, தனது மகள் காதலிப்பது பிடிக்காமல், ஆத்திரத்தில் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து  தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த  திம்மன்  மற்றும் அவரது நண்பன் ராமச்சந்திரன் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். விசாரணைக்கு பிறகு கைதுசெய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo