AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
பள்ளி மாணவிகள் கூட்டு பலாத்காரம்... ஆட்டோ டிரைவர்கள் மீது போக்சோ வழக்கு.!!
சென்னையில் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி அவர்களை கர்ப்பமடைய செய்த 2 நபர்கள் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டாங்குளத்தூர் முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ்(22). புதுச்சேரியை சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ் (23) ஆகிய இருவரும் அரசு பள்ளியில் படிக்கும் 15 மற்றும் 13 வயது மாணவிகளிடம் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கமாகியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமிகளிடம் ஆசையாக பேசி அவர்களை காதலிப்பது போல் நம்ப வைத்து மகாபலிபுரம் அருகே கயாறு பகுதியிலுள்ள பாழடைந்த குடியிருப்பு வளாகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்புணர்வு செய்து அதனை புகைப்படம் எடுத்து வெளியில் காட்டி விடுவோம் என மிரட்டி, தொடர்ந்து வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இதனால் 15 வயது மாணவிக்கு கடும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. தாயார் மருத்துவமனைக்கு சென்று சிறுமையை சோதித்துப் பார்க்கையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ந்த தாய் சிறுமிகளை விசாரித்த போது தங்களுக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார்.
இதற்கடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகாரளித்து அந்த 2 நபர்களையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மாணவிகளுக்கு தேவையான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும் என போலீசார் வாக்களித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!