தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர்.! தாய் கொடுத்த அதிர்ச்சி புகார்.!
சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி, தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். தந்த இறந்து விட்டதால் தாய் இரவு பணிக்கு சென்று குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இந்தநிலையில் தாய் இரவுக்கு பணி சென்று விட்டதும் மாற்றுத்திறனாளி மகள் தனியாக வீட்டில் இருப்பதை இரண்டு நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று தாய் இரவு பணிக்கு வீட்டை விட்டு சென்றதும் அந்த இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மாற்று திறனாளி சிறுமிக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது. இதனையடுத்து அந்த இரண்டு நபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.