தமிழகம்

அனைவரும் தேர்ச்சி என்பது போல் இவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

Summary:

Tutorial students must write 10th exam high court

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. மேலும் +1,+2 மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் மதிப்பெண்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது போல,பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் 10 ஆம் வகுப்பு தனி தேர்வாளர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 22ம்தேதி தனித்தேர்வர்களுக்கு பொதுதேர்வு தொடங்க உள்ளது. ஒரு வாரத்தில் தேர்வு முடிந்து, அக்டோபர் 2ம் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகி விடும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 


Advertisement