பெட்ரோல்,டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது! கோரிக்கை வைத்த டிடிவி தினகரன்!

Ttv dhinakaran request for petrol diesel price increased


Ttv dhinakaran request for petrol diesel price increased

தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அன்றாடத் தேவைகளில் ஒன்றான, அத்தியாவசியப் பொருள்களின் விலையைத் தீர்மானிக்கும் காரணியான பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்களை வேதனைக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார். 

கொரோனாவால்  மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல்,டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. 

இதனால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி  தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு, பெட்ரோல்,டீசல் விலையைக்  குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

அண்மையில் உயர்த்தப்பட்ட வாட் வரியைக்  குறைப்பதன் மூலம் தமிழக அரசும் மக்களின் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.