என் கருவையா கலைக்க சொல்ற?.. மாமியாருக்கு தீ வைத்து கொலை செய்து பால் ஊற்றிய மருமகள்.!

என் கருவையா கலைக்க சொல்ற?.. மாமியாருக்கு தீ வைத்து கொலை செய்து பால் ஊற்றிய மருமகள்.!


Trichy Mother in Law Murdered by Daughter in Law

மாமியாரை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொலை செய்த மருமகள், சடலத்தை தீ வைத்து எரித்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. 

திருச்சியில் உள்ள விஸ்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த பெண்மணி நவீன் (வயது 46). இவர் கடந்த 30 ஆம் தேதி உடல் கருகிய நிலையில் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரின் மருமகளான ரேஷ்மா மயக்க நிலையில் இருந்துள்ளார். 

வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மயக்க நிலையில் இருந்த ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பெண்மணி நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், தனது மாமியார் நவீன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் நவீனின் தலையில் கத்தி போன்ற ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

trichy

இதனையடுத்து, காவல் துறையினர் மருமகள் ரேஷ்மாவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், "நான் தான் மாமியாரை கொலை செய்தேன். நானும் - எனது கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த காதல் திருமணம் எனது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்பதால், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். 

முதல் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தகராறு தொடர்ந்து வந்தது. தற்போது நான் இரண்டாவது முறையாக கருவுற்ற நிலையில், கருவை கலைக்கவும் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை, உடலை தீயிட்டு எரித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தேன்" என்று தெரிவித்தார். ரேஷ்மாவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.