அழகுப் போட்டியில் முதல்பரிசு வென்ற ஜீவா!. இறுதியில் தான் தெரிந்தது திருநங்கை என்று!.

அழகுப் போட்டியில் முதல்பரிசு வென்ற ஜீவா!. இறுதியில் தான் தெரிந்தது திருநங்கை என்று!.



transgender got first price

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வுக்காக நடத்தப்பட்ட சங்கமம் சாதனையாளர் விருது 2018 என்ற நிகழ்வுசென்னையில் நடைபெற்றது. அதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் சிறப்பாக அலங்காரம் செய்ததாக அழகுக் கலை நிபுணர் நிரஞ்சனாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அழகுக் கலை நிபுணர் நிரஞ்சனா திருநங்கையான அவரது தோழி ஜீவாவை இதில் கலந்துகொள்ள  அழைத்துச்சென்றார்.

இதுகுறித்து ஜீவா கூறுகையில், நான் நிரஞ்சனாவிடம் பேசும்போது நான் மற்ற பெண்களை மாதிரி கிடையாது. எனது நிறமும் சற்று கருப்பு தான் எனவே நீங்க ரிஸ்க் எடுக்காதீர்கள் என கூறினேன், ஆனால் என்னால் முடியும் உனக்கு பிரைடல் மேக் அப் போட்டா நீ ரொம்ப அழகா இருப்ப. எனவே நம்ம தான் ஜெயிப்போம் என கூறியுள்ளார்.

Transgender

மேலும் நிகழ்ச்சியில் நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம் என நிரஞ்சனா என்னிடம் கூறினார்கள். பயத்துடனும் படபடப்புடனும் போட்டியில் கலந்துகொண்டேன். இறுதியில் நான் வெற்றிபெற்றதாக கூறினார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அதிகமா ஜீவாவை அதிகமாக ரசித்து பார்த்துள்ளனர். அவர்களுக்கு விருது கொடுக்கும்போது நிரஞ்சனாவையும் ஜீவாவையும் மேடைக்குக் அழைத்துள்ளனர். விருதை வாங்கும்போது தான் ஜீவா அழுதுகொண்டே, தான் ஒரு திருநங்கை என கூறினார். அதனைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து கைதட்டினார்.