தமிழகம்

மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் ரயில் சேவை தொடக்கம்..! நாளை முதல் முன்பதிவு தொடங்கும் - தெற்கு ரயில்வே.!

Summary:

Train service resume in Tamil Nadu

தமிழகத்தில் சில முக்கிய வழித்தடங்களில் வரும் 7ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒருசில ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்த சில முக்கிய தகவல்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் தமிழகத்தில் சில சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து முக்கிய வழித்தடங்களில் ஒன்பது சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வுட்றா வண்டிய பின்னாடி..! முதல் ...

அதன்படி சென்னையில் இருந்து கோவை, திருச்சி, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் 7ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் ரயில் நிலையத்திற்குள் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement