பரிதாபம்... காப்பாற்ற சென்றவர்கள் உட்பட 4 பேர் பலி ... காவல்துறை விசாரணை.!tragedy-near-namakkal-four-people-died-including-those

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்த மூன்று மாணவர்களை  காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே  அபினேஷ்,நிதிஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று மாணவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கனவாய்ப்பட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி அருகில் இருந்த கிணற்றில் வைக்குடன் விழுந்துள்ளனர்.

tamilnadu

இதனைப் பார்த்து அப்பகுதியிலிருந்த மூன்று பேர் பைக்கில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக கிணத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் பைக்கில் சென்ற அபினேஷ் மற்றும் நிதீஷ் குமார் என்ற இரண்டு மாணவர்களும் காயங்களுடன் மேலே வந்து விட்டனர். மாணவர் விக்னேஷ் மற்றும் இவர்களை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த மூன்று பேர் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.