குமரியில் சோகம்.. மகளுக்கு தல பொங்கல்.. சீர் கொடுக்க சென்ற தாய் விபத்தில் சிக்கி பலியான சம்பவம்..!

குமரியில் சோகம்.. மகளுக்கு தல பொங்கல்.. சீர் கொடுக்க சென்ற தாய் விபத்தில் சிக்கி பலியான சம்பவம்..!


Tragedy in Kumari.. Mother died in an accident when she went to give Tala Pongal to her daughter..!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே பூதப்பாண்டி பகுதியில் வசித்து வருபவர் உலகம்மாள். இவரது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனால் தல பொங்கலுக்கு சீர் கொடுப்பதற்காக உறவினர்கள் 6 பேருடன் உலகம்மாள் காரில் சென்றுள்ளார்.

அப்போது பூதப்பாண்டி அடுத்த தாழக்குடி சாலையில் கார் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உலகம்மாள் மற்றும் அவரது உறவுகார பெண்ணான உமா என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

Kumari

மேலும் காரில் பயணம் செய்த மற்ற 4 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்