1 1/2 வயது குழந்தைக்கு பக்கத்து வீட்டில் நேர்ந்த சோகம்... எமனாக மாறிய வாளி... நடந்தது என்ன.?

1 1/2 வயது குழந்தைக்கு பக்கத்து வீட்டில் நேர்ந்த சோகம்... எமனாக மாறிய வாளி... நடந்தது என்ன.?


tragedy-happened-to-a-1-12-year-old-child-bucket-turned

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி பகுதியைச் சேர்ந்தவர் பால சந்துரு இவரது மனைவி சுபஸ்ரீ . இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் தர்ஷன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் நேற்று சுபஸ்ரீ வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது மகனை காணவில்லை.

tamilnaduஇது தொடர்பாக வீடெங்கிலும் தேடியும் கிடைக்காததால் பக்கத்து வீட்டிற்கு சென்று தேடி இருக்கிறார். அப்போது தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் வாளியில் சிறுவன் விழுந்து மயங்கி கிடந்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட சுபஸ்ரீ உடனடியாக காயாமொழி அரச ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

tamilnaduஅங்கிருந்த மருத்துவர்கள்  திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சிறுவனை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.