கடந்த 26 நாட்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல் விலை.! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

கடந்த 26 நாட்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல் விலை.! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!



Today petrol diesel price

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இந்தநிலையில் பெட்ரோல் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் விலை 26 வது நாளாக ஒரே விலையில் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

petrol

ஆனால் கடந்த 26  நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பன செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல் விலை 26 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல் லிட்டர் 84.14 ரூபாய்க்கும், அதேபோல்  டீசல் விலையிலும் 16 வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல்  லிட்டருக்கு 75.95 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.