தினமும் வீட்டிற்கு போன் செய்து நலம் விசாரித்த மகன்..! ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வந்த டெலிபோன் அழைப்பு..! நொறுங்கி போன குடும்பத்தினர்.

தினமும் வீட்டிற்கு போன் செய்து நலம் விசாரித்த மகன்..! ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வந்த டெலிபோன் அழைப்பு..! நொறுங்கி போன குடும்பத்தினர்.



TN young Man dead who worked in Japan

தினமும் வீட்டிற்கு போன் செய்து நலம் விசாரிக்கும் மகன் இறந்து விட்டதாக வந்த செய்தி அவரது குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ளது ஆனிகுளம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது கடைசி மகன் மாதவன் என்பவர் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்துள்ள நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். 

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மாதவன் தினமும் தனது வீட்டிற்கு போன் செய்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டிலிருந்து மாதவனின் குடும்பத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 

ஆனால் இந்த முறை பேசியது மாதவன் இல்லை. மாதவன் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து போன் செய்த அதிகாரிகள் உங்கள் மகன் மாதவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் கதறி துடித்துள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்ற மகன் இறந்த செய்தி மாதவனின் பெற்றோரை கடும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தனது சகோதரனின் மரணம் குறித்து பேசிய அவரது சகோதரர் கூறுகையில், "எனது தம்பி போனில் பேசிய போது நல்ல முறையில் தான் பேசியதாகவும், ஆனால் அவன் வேலை பார்த்துவந்த அந்த நிறுவனம் மாதவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்".

மேலும் தமிழக அரசு இந்திய தூதரகம் மூலம் எனது தம்பி இறப்பு குறித்து உண்மை நிலையை விசாரிக்க வேண்டும் எனவும், மாதவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதவனின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.