சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!



TN govt honour funeral to Solomon papaiya

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக அரசு மரியாதை செலுத்தும் வகையில், அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சாலமன் பாப்பையா (வயது 90) தனது எளிமையான பேச்சு, நகைச்சுவை கலந்த அணுகுமுறை மற்றும் ஆழமான தமிழ் அறிவால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கியக் கருத்துகளையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சாலமன் பாப்பையா முக்கிய பங்கு வகித்தார். பட்டிமன்றங்கள் மூலம் தமிழக மக்களிடையே நீண்ட காலமாக பிரபலமாக இருந்த அவர், தனது தனித்துவமான பேச்சு நடையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருந்தார்.

இதையும் படிங்க: #BREAKING : பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா காலமானார்!

சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது தமிழ் சேவையையும், சமூகப் பங்களிப்பையும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாக பார்க்கப்படும் நிலையில், அவரது தமிழ் பணிகள் என்றும் நினைவுகூரப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள்! சிலை கரைப்புக்கும் புதிய விதிமுறைகள்!