தமிழகம்

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..! முதலமைச்சர் எடப்பாடி விரைகிறார்..!

Summary:

TN deputy CM OPS admitted in chennai hospital

தமிழக துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார்  மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை பார்ப்பதற்காக தமிழக முதலவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மருத்துவமனைக்கு செல்கிறார்.

வழக்கமான பரிசோதனைக்காகத்தான் துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசோதனை முடிந்தபிறகு இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளது.


Advertisement