அரசியல் தமிழகம்

தத்தளிக்கும் தமிழகம்!! விரைவில் முக்கிய ஆலோசனை!! முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!!

Summary:

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் மே 19-ல் முதல்வர் மு.க.ஸ்ட

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும்நிலையில் வரும் மே 19-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவில் உயிரிழந்தும்வருகின்றனர். அதேநேரம் கொரோனவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் மே 19-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூடத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Advertisement