மீண்டும் தமிழகத்தில் தொடங்கியது பேருந்து சேவை..! பேருந்து இயக்கத்திற்கான முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!

மீண்டும் தமிழகத்தில் தொடங்கியது பேருந்து சேவை..! பேருந்து இயக்கத்திற்கான முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!



TN Bus service resume from today with conditions

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 70 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக்கு சேவை ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இன்றுமுதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்திற்கான தடை நீடிக்கிறது. இந்த 3 மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் படிப்படியாக பேருந்து சேவை இன்று முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

corono

அதன்படி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும். முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும் போதும் முழு பேருந்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.

பயணிகள் பேருந்தின் பின்படிக்கட்டு மூலம் மட்டுமே என்ற அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.

பயணிகள் பேருந்தில் நின்று கொண்டு செல்ல அனுமதி இல்லை. கொரோனா அறிகுறி உள்ளவர்கள், இருமல், தும்மல் உள்ளவர்கள் பேருந்துகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.