பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் மீது பழிக்குப்பழியாக ஆசிட் வீச்சு? திருவாரூரில் திடுக்.!



Tiruvarur Shocker: Teacher Attacked With Acid Amid Sexual Harassment Probe

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பழிக்குப்பழியாக ஆத்திரத்தில் ஆசிரியர் மீது ஆசிட் வீசப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.

பயணம் செய்தார்:

திருவாரூர் மாவட்டம், பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (வயது 48). இவர் திருவாரூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் 15ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!

சிகிச்சைக்கு அனுமதி:

அப்போது, வேறொரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 நபர்கள், வாஞ்சிநாதனின் முகத்தில் ஆசிட் வீசி தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாஞ்சிநாதன் திருவாரூரில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வாஞ்சிநாதன் குடவாசல் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

Crime news

பாலியல் தொல்லை:

இதனிடையே, அதிகாரிகள் விசாரித்தபோது, வாஞ்சிநாதன் அதே பள்ளியில் படித்து வரும் மாணவியை விளையாட்டு பயிற்சிக்காக வெளியூர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த மாணவி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சென்றுவிட்டபோதிலும், எடுத்து வைத்த வீடியோவை காண்பித்து மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதனால் வாஞ்சிநாதனின் மீது ஆசிட் வீசப்பட்டதா? என்ற கோணத்தில் தலைமறைவான 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!