வெஜிடேரியனா நீங்க? புரோட்டீன் எப்படி எடுத்துக்கொள்வது? சூப்பர் டிப்ஸ் இதோ.!



Vegetarian Protein Sources: Best High-Protein Foods for Fitness and Muscle Growth

உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் வழிமுறைகளை எளிமையாக மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி கூறியுள்ளார்.

உடற்பயிற்சி:

ஒவ்வொருவரும் தற்போதுள்ள காலத்தில் உடலை முறையாக பராமரிப்பதன் அவசியத்தை புரிந்துகொண்டு செயல்பட்டு வருகின்றனர். உடற்பயிற்சி கூடம் செல்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது என தங்களின் அன்றாட வாழ்க்கையை மெருகூட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: கிராமத்து சுவையில் மத்தி மீன் குழம்பு.. வீட்டிலேயே நாவூற செய்து அசத்துங்கள்.!

புரதம்:

உடற்பயிற்சி செய்பவர்கள் உடலுக்கு தேவையான புரதத்தை காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகளில் இருந்து பொதுவாக எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், இறைச்சிகளை காட்டிலும் காய்கறிகளில் அதிக புரதம் கொண்ட உணவுகளும் இருக்கின்றன. அதுகுறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

health tips

பச்சை பட்டாணி:

அவர் கூறிய தகவலின்படி, சைவ வகை உணவுகளில் காலை நிலக்கடலை 50 கிராம் அல்லது முளைகட்டிய பச்சை பயிறு ஆகியவற்றை சாப்பிடலாம். மதியம் வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல், சோயா பீன்ஸ், ராஜ்மா பீன்ஸ், டபுள் பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். 

தயிர்:

இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவோர், சப்பாத்தி மாவுக்கு கோதுமையை அரைக்கும் போதே சோளம், ராஜ்கிரா, கருப்பு கொண்டக்கடலை சேர்த்து அரைத்து மாவு கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இந்த விஷயத்துக்கு தொடுக்கறியாக தயிர், பன்னீரும் சேர்த்துக்கலாம். புரதம் எடுத்துக்கொள்வோர் சுழற்சி முறையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிக்கன், மட்டன் போன்றவற்றை தினமும் வாங்க சிரமப்படுவோர், காய்கறிகள், தானியங்களை வாங்கி சாப்பிடலாம்.  

இதையும் படிங்க: சாப்பிட்டதும் இவ்வாறான விஷயங்களை செய்றீங்களா? ரொம்ப ஆபத்து.. உஷார்.!