உங்க ராசி என்ன? முருகனை இப்படி வழிபடுங்கள்.. வாழ்க்கையில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உறுதி.!
குடும்பம், தொழில், நல்ல மாற்றம் ஏற்பட முருகனை வணங்க வேண்டும்.
வெற்றியின் அடையாளம்:
இந்து சமய நம்பிக்கையின்படி, 12 ராசிக்காரர்களும் தங்களின் ராசிக்கேற்ப முருகனை வழிபட வழிமுறைகள் என்பது இருக்கின்றன. இதனை சரியாக கடைபிடித்தால் மனஅமைதி, தன்னம்பிக்கை அதிகமாகும். மலர்கள், தீபம், அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த வாழ்க்கைத்தடை குறையும். குடும்ப நலன், தொழில் முன்னேற்றம், உறவுகளில் முன்னேற்றம் அடையும். முருகன் தைரியம், வெற்றி, அறிவின் அடையாளமாக போற்றப்படுவதால், அவர் நம்பிக்கையுடன் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் உதவுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதையும் படிங்க: Sevvai Peyarchi: இந்த 3 ராசிகளுக்கு நல்லகாலம் பிறக்குது.. இடம்பெயரும் செவ்வாய்.!
மேஷம், ரிஷபம், மிதுனம்:
சிகப்பு நிற மலர்கள் கொண்டு முருகனுக்கு மேஷ ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய தன்னம்பிக்கை அதிகமாகும். ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் முருகனை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது குடும்பத்தில் அமைதியை தரும். மிதுன ரசிக்கிறார்கள் முருகன் மந்திரத்தை உச்சரித்து வழிபட மனக்குழப்பம் நீங்கும்.
கடகம், சிம்மம், கன்னி:
கடக ராசிக்காரர்கள் முருகனுக்கு பால் அம்பிஷேகம் செய்வது மனஅமைதி தரும். சிம்ம ராசிக்காரர்கள் முருகனுக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். இது தலைமைத்திறன், தைரியத்தை வளர்க்கும். கன்னி ராசிக்காரர்கள் கோயிலுக்கு சென்று வழிபட தொழில், கல்வி முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம், விருச்சகம், தனுசு:
துலாம் ராசிக்காரர்கள் முருகனுக்கு மலர்மாலை அணிவித்து வழிபட உறவு ஒற்றுமை அதிகமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் முருகன் மந்திரத்தை மனதில் உச்சரிக்க மனஉறுதி அதிகமாகும். தனுசு ராசிக்காரர்கள் முருகன் கோயிலில் நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.
மகரம், கும்பம், மீனம்:
மகர ராசிக்காரர்கள் முருகனுக்கு சந்தனக்காப்பு சமர்ப்பித்து வழிபட்டால் தொழில் முன்னேற்றம் கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் தானம் செய்வது சமூகத்தில் மரியாதையை கொடுக்க வைக்கும். மனநிறைவு கிடைக்கும். மீன ராசிக்காரர்க முருகனின் பக்தி பாடல் பாடுவது ஆன்மீக அமைதியை கொடுக்கும்.
இதையும் படிங்க: தோஷங்களை நீக்கும் பைரவர் வழிபாடு.. உங்க ராசிக்கு எப்படி வணங்க வேண்டும்? தெரிஞ்சிக்கோங்க.!