கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கடத்தல்.. பக்கா ஸ்கெட்சுடன் தூக்கிய கும்பல் பரபரப்பு கைது.!Tiruppur Man Kidnapped by 3 Man Gang Police Arrest All of Them

20 வயது இளைஞரை கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையில் கடத்தி சென்று தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மண்ணரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் தாலுகாவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 20). 

கார்த்திக்குக்கும் - ரியாஸுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவில் கார்த்திக், ரியாஸ் ஆகியோர் சேர்ந்து, சதீஷ் குமாரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். 

Tiruppur

திருப்பூரில் உள்ள ராயபுரம் பகுதியில் வீட்டில் சதீஷ் குமாரை அடைத்து வைத்த இருவரும், பணம் கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வீட்டில் இருந்த சிறுவனும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளார். 

அங்கிருந்து எப்படியோ தப்பி வந்த சதீஷ்குமார், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திக் மற்றும் ரியாசுடன் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவன் என 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.