கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. தலை நசுங்கி செத்துப்போன கள்ளக்காதலன்.. பரபரப்பு சம்பவம்..!  

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. தலை நசுங்கி செத்துப்போன கள்ளக்காதலன்.. பரபரப்பு சம்பவம்..!  


Tiruppur Husband Kills Wife Affair Man 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சசிகுமார் (வயது 41) - பிரியா வயது (35). தம்பதிகள் இருவரும் திருப்பூரில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், இதே பனியன் நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் (வயது 30) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, தமிழரசன் - பிரியா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் களளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஒரு கட்டத்திற்கு மேல் சசிகுமாருக்கு விசயம் தெரியவரவே, அவர் தனது மனைவி மற்றும் தமிழரசனை கண்டித்திருக்கிறார். இதனை கேட்டுக் கொள்ளாத கள்ளக்காதல் ஜோடி தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று இரவில் பிரியா இரவு நேர பணிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்‌. ஆனால், கணவர் சசிகுமாருக்கு மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட, அவர் பணியிடத்திற்கு தான் சென்றுள்ளாரா? என்று நிறுவனத்திற்கு சென்று சோதனை செய்துள்ளார்‌. அப்போது அவர் பணிக்கு வரவில்லை என்பது உறுதியாகிட, தமிழரசனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளனர்.  

இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சசிக்குமார் தமிழ்ச்செல்வனிடம் தகராறு செய்யவே, ஆத்திரமடைந்த இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சசிக்குமார் மனைவியின் கள்ளக்காதலன் தமிழ்ச்செல்வனின் மீது அம்மிகல்லை போட்டு படுகொலை செய்துள்ளார். இதில் தலை நசுங்கி தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாம்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.