அதிரடி ரெய்டில் ஆடிப்போன அதிகாரிகள்.. போலி அடையாள அட்டையுடன் பிடிபட்ட 9 பேர்.. பரபரப்பு தகவல்.!

அதிரடி ரெய்டில் ஆடிப்போன அதிகாரிகள்.. போலி அடையாள அட்டையுடன் பிடிபட்ட 9 பேர்.. பரபரப்பு தகவல்.!



Tiruppur City Police Raid about Illegal Entry By Bangladeshi Persons 9 Arrested Prisoned at Puzhal Jail

ரகசிய தகவலின் பேரில் திருப்பூர் மாநகர காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், போலியான ஆவணத்துடன் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 9 பேர் கைதாகினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி மற்றும் நல்லூர் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசம் நாட்டினை சார்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக திருப்பூர் மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மாநகர காவல் ஆணையர் வனிதாவின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

நல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட செவந்தாம்பளையம் பகுதியில் நடந்த சோதனையில், 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் தங்கியது உறுதியான நிலையில், அவர்கள் வங்கதேசத்தை சார்ந்த பரிதுல் இஸ்லாம் (வயது 24), ரிடாய் ஹுசைன் ரபாத் (வயது 23), சிமில் ரஹ்மான் (வயது 27), ரேகான் (வயது 26) என்பது உறுதியானது. 

Tiruppur

இவர்கள் நால்வரும் போலியான ஆவணத்தை சமர்ப்பித்து, முத்தணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது உறுதியானது. இதனையடுத்து, இவர்கள் நால்வரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதனைப்போல, திருமுருகன்பூண்டி பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சார்ந்த முகமது மஹத் அசன் (வயது 26), முகமது கமல் (வயது 43), அபிப் (வயது 29), முகமது நஜரூல் இஸ்லாத் (வயது 24) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் 9 பேரும் போலியான ஆதார் அட்டை மற்றும் பிற அடையாள அட்டையை பயன்படுத்தியதும் அம்பலமானது. இவர்கள் போலியான ஆவணம் மூலமாக திருப்பூரில் உள்ள பல நிறுவனங்களில் வேலைக்கும் சேர்ந்துள்ளனர். கைதான 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.