
கார் - பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. தீப்பிடித்து எரிந்ததால் ஒருவர் உடல் கருகி பலி.. பகீர் வீடியோ.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள படியூர் கிராமத்தில் கார் - பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், இரண்டு வாகனமும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்தில், காரில் பயணித்தவர் காருக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தளகுந்தாவில் இருந்து குழந்தைகள் உட்பட 25 க்கும் மேற்பட்டவர்கள், காங்கேயம் காமாட்சிபுரம் கோவிலுக்கு செல்ல பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது, திருப்பூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து செல்கையில், படியூர் அருகே விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், கார் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொள்ளவே, பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் பதறியபடி கீழே இறங்கியுள்ளனர். காரில் இருந்தவர் இறங்க இயலாத நிலையில், தீப்பிடித்ததால் அவரை பொதுமக்கள் காப்பாற்ற முடியவில்லை. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், அதிகாரிகள் வருவதற்குள் இரண்டு வாகனமும் கொழுந்துவிட்டு தீப்பற்றி எரிந்ததில், காரில் சிக்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காங்கேயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement