மலைப்பாதையில் பரிதாபம்.. வேன் 50 அடி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில், 11 பேர் துடிதுடிக்க மரணம்.!

மலைப்பாதையில் பரிதாபம்.. வேன் 50 அடி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில், 11 பேர் துடிதுடிக்க மரணம்.!



tirupattur-jawadhu-hills-accident-11-died

யுகாதி பண்டிகையை கொண்டாட மலைப்பகுதி வழியே பயணம் செய்த வாகனம் விபத்திற்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவச்சாள் நாடு என 3 கிராம ஊராட்சிக்கு உட்பட்டு 20 குக்கிராமம் உள்ளது. நெல்லிவாசல் காடு சேம்பரை மலைக்கிராம மக்கள் ஆஞ்சநேயர் கோவிலில் யுகாதி பண்டிகையை வெகுவிமரிசையாக சிறப்பித்து வருவது வழக்கம். 

இந்நிலையில், நடப்பு வருட யுகாதி பண்டியையை சிறப்பிக்க கிராம மக்கள் வேனில் 30 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். கோவிலுக்கு செல்லும் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மலைப்பகுதியில் 12 மணியளவில் வேன் சென்று கொண்டு இருந்தது. 

அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில், சுகந்தரா (வயது 55). துர்கா (வயது 40), பரிமளா (வயது 12). பவித்ரா (வயது 18), செல்வி (வயது 35), மங்கை (வயது 60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

Tirupattur

இந்த தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஜெயப்பிரியா (வயது 16), திக்கியம்மாள் (வயது 47), சின்னதிக்கி (வயது 22), அலமேலு (வயது 12), சென்னம்மாள் (வயது 12) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த கோர விபத்தில் மொத்தமாக 11 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் உடல் சொந்த கிராமத்தில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.