#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
திருமணமான 3 மாதத்தில் 19 வயது இளம்பெண் கடிதம் எழுதிவைத்து தற்கொலை; கண்ணீரில் கணவர்.!

திருநெல்வேலி நகரம் வையாபுரி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார். இவரின் மனைவி அமுதா (வயது 19). தம்பதிகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
நெல்லை நகரில் இருக்கும் தனியார் கடையில் சரவணகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அமுதாவிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சரவணகுமார் சென்றுள்ளார்.
இதில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் அமுதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு அமுதா எழுதிய கடிதத்தில், "தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை" என்றும் குறிப்பிட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து 3 மாதமே ஆவதால், வட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.