ஆணைப்போல வேடமிட்டு மாமியாரை கொடூர கொலை செய்த இளம் மருமகள்.. காவல்துறையிடம் சிக்கியது எப்படி?..!

ஆணைப்போல வேடமிட்டு மாமியாரை கொடூர கொலை செய்த இளம் மருமகள்.. காவல்துறையிடம் சிக்கியது எப்படி?..!


Tirunelveli Women Killed Mother In Law 

தன்னை அவதூறாக பேசிய மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் வடுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 64). மனைவி சீதாலட்சுமி (வயது 59). தம்பதியின் மகன் மாரியப்பன். எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் மாறியப்பனின் மனைவி மகாலட்சுமி (வயது 25). 

மாரியப்பன் - மகாலட்சுமி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மாரியப்பனின் பெற்றோர் வீட்டருகே தனிக்குடித்தனம் நடத்தி வருகிறர்கள். மகாலட்சுமி தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவரும்போது, மளிகை உட்பட சில பொருட்கள் திருடுபோயுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மருமகள் மாமனாரின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பணம் எடுத்ததாக தெரியவருகிறது. இதனை சீதாலட்சுமி கண்டித்து இருக்கிறார். இதில் அவர்களுக்கு வாக்குவாதம் எழுந்து, நீ என் வீட்டிற்கு வரக்கூடாது என மருமகள் மாமியாரிடம் வாதம் செய்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை பால் கறக்க சண்முகவேல் வெளியே சென்றார். மகாலட்சுமி ஆண்பிள்ளை போல டிராக் பேண்ட், சட்டை, தலையில் தலைக்கவசம் அணிந்து மாமனாரின் வீட்டிற்கு சென்று உறங்கிக்கொண்டிருந்த சீதாலெட்சுமியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். 

இரத்த வெள்ளத்தில் அலறி மயங்கிய சீதாலெட்சுமியின் 5 சவரன் தங்க னையை எடுத்து சென்ற மகாலட்சுமி, எதுவும் தெரியாதது போல இருந்துகொண்டார். சண்முகவேல் பால் கறந்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறியுள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு மகாலட்சுமி வந்து எதுவும் தெரியாதது போல விசாரித்து, மாமியாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப உதவியுள்ளார். அங்கு சீதாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விஷயம் தொடர்பாக  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சந்தேகம் மகாலட்சுமியை நோக்கி திரும்ப, அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது உண்மை அம்பலமானது. அதாவது, எப்போதும் தன்னை அவதூறாக பேசிய மாமியாரை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு, சந்தேகம் வரக்கூடாது என ஆணைப்போல வேடமிட்டு நடனமாடியது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் மகாலட்சுமியை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.