"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
50-க்கும் மேற்பட்ட பெண்கள்.. பெயிண்டரின் பரபரப்பு செயல்.. விசாரணையில் பகீர் தகவல்.. பெண்களே உஷார்.!
சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவு செய்யும் பெண்களின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்து வந்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் பல பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜூவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இந்த புகாரில், "தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிராம் காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, வள்ளியூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 29) என்ற வாலிபர் மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தனர். அவரின் அலைபேசியை ஆய்வு செய்தபோது, அது கேரள மாநிலத்தில் உள்ள அந்தியூர்க்கோணத்தில் இருப்பது உறுதியானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கேரள காவல் துறையினரின் உதவியுடன் முத்துக்குமாரை தேடி வந்தனர். அவர் பெயிண்டராக பணியாற்றி வந்த நிலையில், பணியிடத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை திருநெல்வேலிக்கு அழைத்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 10 வருடமாக கேரளாவில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்த முத்துக்குமார், சமீபத்தில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்த நிலையில், இவ்வாறான செயல்களை செய்து வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு படித்துள்ள அவர், செல்போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்து பெண்களின் புகைப்படத்தை முகநூலில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளான்.
இவ்வாறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை பெண்களுக்கே திருப்பி அனுப்பி, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளான். சில பெண்கள் அவனின் மிரட்டலுக்கு பயந்து பணம் அனுப்பிய நிகழ்வும் நடந்துள்ளது. அவனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.