காதலை கைவிட மறுத்த மகள் கழுத்தை நெரித்து கொலை.. தென்மாவட்டத்தை உலுக்கும் ஆணவக்கொலை.. சீவலப்பேரி அருகே சம்பவம்.!

காதலை கைவிட மறுத்த மகள் கழுத்தை நெரித்து கொலை.. தென்மாவட்டத்தை உலுக்கும் ஆணவக்கொலை.. சீவலப்பேரி அருகே சம்பவம்.!


Tirunelveli Seevalaeperi Mother killed Daughter

கல்லூரியில் படிக்கச் சென்ற பெண்மணி காதல் வயப்பட்ட நிலையில், மகள் மற்றொரு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தாயால் கொலை செய்யப்பட்டார். தாயும் தற்கொலைக்கு முயற்சித்து உயிருக்கு போராடி வருகிறார். தென்மாவட்டத்தை உலுக்கும் சம்பவம் தொடர்பான விபரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி, பாலமடை பெருமாள்கோவில் தெருவில் வசித்து வருபவர் பேச்சி. இவர் சென்னையில் தங்கியிருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பேச்சியின் மனைவி ஆறுமுக கனி (வயது 45). தம்பதிகளுக்கு அருணா என்ற 19 வயதுடைய மகள் இருக்கிறார். 

இவர் கோயம்புத்தூரில் நர்சிங் பயின்று வருகிறார். சமீபத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் தாய் மற்றும் மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே, இருவரும் நீண்ட நேரம் கழித்து உறங்கியுள்ளனர். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. 

இதனால் பக்கத்து வீட்டினர் பேசியின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, அருணா மயக்கமான நிலையி இருந்துள்ளார். ஆறுமுக கனி வாயில் நுரைதள்ளியவாறு இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

tirunelveli

மருத்துவர்களின் பரிசோதனையில் அருணா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மேலும், ஆறுமுகக்கனி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சீவலப்பேரி காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் மாணவியின் தாயிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் அம்பலமானது. 

கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும் அருணா, வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அருணா மனஉளைச்சலடைந்துள்ளார். மேலும், மகளுக்கு வேறொரு இடத்தில வரண்பார்த்து திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். 

இந்த விசயத்திற்கு அருணா எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ஆறுமுகக்கனி தனது மகளை கொலை செய்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது.