எனக்கே பொண்ணு கொடுக்கமாட்டியா நீ?.. போதையில் இளைஞர் செய்த பயங்கரம்..!

திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்த பெண்ணின் வீட்டில் புகுந்து போதை இளைஞர் தாக்குதல் நடத்தினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பணி கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்சுதீன். இவர் அப்பகுதியில் வசித்து வரும் தம்பதியின் வீட்டிற்கு சென்று, அவரின் மகளை வரன் கேட்டுள்ளார்.
ராம்சுதீனின் நடத்தை சரியில்லாதது என்பதால், பெண் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், வீட்டில் தாய் மற்றும் மகள் தனியே இருக்கையில் அங்கு நுழைந்துள்ளார்.
கத்தரிக்கோல் கொண்டு இருவரையும் கொலை செய்யும் முயற்சியுடன் தாக்குதல் நடத்திய ராம், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார்.
மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.