80 வயது மூதாட்டியை சுடுகாட்டில் விட்டுச்சென்ற குடும்பத்தினர்.. உணவுக்கு தவியாய் தவித்த சோகம்; நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!

80 வயது மூதாட்டியை சுடுகாட்டில் விட்டுச்சென்ற குடும்பத்தினர்.. உணவுக்கு தவியாய் தவித்த சோகம்; நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!



tirunelveli-kalakkad-aged-women-issue

 

கணவரின் தாயாரை மனைவி மற்றும் அவரின் குடும்பத்தார்கள் பராமரிக்க மனமின்றி சுடுகாட்டில் கட்டிலோடு வீட்டுச்சென்ற சோகம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, மூணாற்று பிரிவு சுடுகாட்டில் மூதாட்டி கட்டிலுடன் நேற்று அமர்ந்து இருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, மூதாட்டி களக்காடு சிதம்பரபுரம், வடக்குத்தெருவில் வசித்து வரும் இசக்கியம்மாள் (வயது 80) என்பது தெரியவந்தது. அவரின் கணவர் ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில், தம்பதியின் மகன் கந்தசாமியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கந்தசாமியும் உயிரிழந்துவிட்ட காரணத்தால், கந்தசாமியுடைய 2 மனைவிகள் இசக்கியம்மாளை கவனித்து வந்துள்ளனர். நேற்று அவரின் உறவினர்கள் இசக்கியமாளை கட்டிலோடு சுடுகாட்டில் விட்டு சென்றுள்ளனர்.

tirunelveli

மூதாட்டி உணவுக்கும் வழியின்றி தவித்த நிலையில், அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த களக்காடு காவல் உதவி ஆய்வாளர் இசக்கி, மூதாட்டியை ஆட்டோ மூலமாக வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு மூதாட்டியை வீட்டில் ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஊர் பெரியவர்களும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட, அதன்பின்னரே குடும்பத்தினர் மூதாட்டியை கவனிப்பதாக உறுதி அளித்தனர்.