யாராவது வாங்க... அதிகாலை வீட்டில் கேட்ட 9 வயது சிறுமியின் அலறல் சத்தம்...! பின்புறம் தப்பி சென்ற கொடூரன்... வசமாக சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!!!
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலையில் சிறுமியின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: மர்ம சூட்கேஸ்ஸில் வீசிய துர்நாற்றம்! துண்டு துண்டாக வெட்டி கிடந்த ஆணின் சடலம்! கணவனா? காதலனா? சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய அந்த காட்சி...!!!
சிசிடிவி காட்சிகளில் சிக்கிய மர்ம நபர்
ஆரம்பகட்ட விசாரணையில் குற்றவாளி யார் என்பது தெரியவில்லை. இதனால் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அதில், வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச் சென்ற நபரின் காட்சிகள் கிடைத்தன. அந்த பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ்தேவ்ராய் என்பவர் குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
குற்றவாளியை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கைக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம் குற்றம் தொடர்பான முக்கிய தடயங்கள் கண்டறியப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சில நிமிட நிகழ்ச்சிகாக பல கோடி செலவா? மேட்டூரில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! கொதிக்கும் தமிழக மக்கள்...!!!