மனுஷங்களா நீங்களாம்? சொந்த இரத்தம் அலறியும் கேட்காத கொடூர மனம்...! மகளுக்கு எமனான பெற்ற தந்தை... 21 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!!!
டாபரா அருகே குடும்பத் தகராறில் 21 வயது இளம்பெண் நந்தினி யாதவ் அனு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாரியா புரா கிராமத்தில் நடந்த இந்த கொலையில், அவரது தந்தை பகவண்டாஸ் மற்றும் மாமா சந்தோஷ் யாதவ் ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நந்தினியை மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
துணிகளை எடுக்க வீட்டுக்கு வந்த இளம்பெண்
நந்தினி உள்ளூர் வணிக வளாகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்த அவர், தனது துணிகளை எடுத்துச் செல்வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது தந்தையும் மாமாவும் நந்தினியுடன் தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி 8-ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கி... இரு கைகளும் உடைத்த ஆசிரியர்.! இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி...!!!
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து நந்தினியின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட மோதலே கொலைக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைனர் சகோதரியையும் கொல்ல முயற்சி
நந்தினியை கொன்றதுடன், வீட்டில் இருந்த அவரது மைனர் சகோதரியையும் இருவரும் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருந்து தப்பிய சிறுமி, வீட்டில் நடந்த சண்டை குறித்தும், அதன்பின்னர் தனது தந்தையும் மாமாவும் நந்தினியை கழுத்தை நெரித்தது குறித்தும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, குடும்பத்தினர் நந்தினியை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
போலீசார் விசாரணை தீவிரம்
டாபரா அருகே உள்ள பிச்சோர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கௌரவக் கொலை என கூறப்படும் இந்த வழக்கில், கொலைக்கான உண்மையான காரணம் என்ன, குடும்பத் தகராறின் பின்னணி என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, நந்தினி யாதவ் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் சாமியார் வேடமிட்டு நைசாக பேசி நகைகளை திருடிய போலி சாமியார்கள்! காரில் பெண்களிடம் நடந்த கொள்ளை... அதிர்ச்சி காட்சி!!!