இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மூலமா.. இளைஞர்கள் எதையெல்லாம் செய்றாங்க பாருங்க...!

இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மூலமா.. இளைஞர்கள் எதையெல்லாம் செய்றாங்க பாருங்க...!



through-instagram-or-facebook-look-what-the-youth-are-d

இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தகவல்.

மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் ஏரியாவில் இளைஞர்கள் சிலர், இன்ஸ்டாகிராம் வாயிலாக சக இளைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு  போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராம் மூலம் லொக்கேஷன் வசதியை பயன்படுத்தி, மதுரையை சுற்றியுள்ள இடங்களில், இளைஞர்களை வரவழைத்து, போதை பொருளை சிறிது சிறிதாக, சுமார் 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததுள்ளனர்

இது தொடர்பாக, மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, தல்லாகுளம் காவல் ஆணையர் மற்றும் ஆய்வாளர் உள்ளிட்டோர், தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில்,‌ இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இளைஞர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ போதை பொருட்கள், பைக் மற்றும் மூன்று செல்போன்கள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பலருக்கு போதை பொருளை விற்பனை செய்து வந்தது உறுதியானது.

அந்த இளைஞர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மூலம் போதை பொருளை விற்பனை செய்து வந்ததாகவும், போன் நம்பர் யாருக்கும் தெரியாது என்பதால் எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக, இப்படி விற்பனை செய்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம், மதுரை பசுமலை பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.